Home » » இந்தியச் சிறுமியின் கண்டுபிடிப்பு விண்வெளி செல்கிறது

இந்தியச் சிறுமியின் கண்டுபிடிப்பு விண்வெளி செல்கிறது

Written By Namnilam on Sunday, August 31, 2014 | 10:50 AM

ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த இந்தியப் பெண் பிரேர்னா பாய் தயாரித்த இரண்டு சோதனைகள் விண்ணில் வரும் ஜூன் 26 அன்று ஏவப்படுகிறது. விளையும் இளைய அறிவியலாளர்கள் திட்டம் ஒன்றினை அமெரிக்காவின் நாசா நடத்தி வருகிறது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் சமர்ப்பித்த சோதனைகளில் இருந்து 100 சோதனைகளை நாஸா தேர்வுசெய்துள்ளது. இந்த நூறு சோதனைகளில் 75 அமெரிக்க மாணவர்களுடையது. 

மற்றவை உலகின் இதர பகுதி மாணவர்களுடையதாகும். பதினோரு வயதான பிரேர்னா பாய் சார்ஜாவில் உள்ள டில்லி பிரைவேட் பள்ளியில் ஏழாம் வகுப்பில் படித்து வருகிறார். அறிவியலாளராக விரும்பும் பிரேர்னா தொடர்ந்து நாசா மாணவர் திட்டங்களில் பங்கேற்று வருகிறார். கடந்த மே மாதத்தில் "விண்வெளியில் கனசதுரங்கள்" என்ற திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தில் விண்ணில் ஏவக்கூடிய கனசதுரக் கருவிகளை உற்பத்தி செய்யுமாறு உலகெங்கும் உள்ள 11 முதல் 14 வயது வ்ரையிலான மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. 

பிரேர் "TO STICK OR NOT TO STICK", "TIME AND PRESSURE" ஆகிய இரண்டு முன்மொழிவுகளை அனுப்பியிருந்தார். நாசா அவற்றை தேர்வு செய்தபின் ஒரு பெட்டியை அனுப்பியது. அதற்குள் பிரேர்னா தனது சோதனைகளை வைத்து நாசாவுக்கு அனுப்பி வைத்தார். இதில் காற்று அழுத்தம் இல்லாத விண்வெளியில் பல்வேறு ஒட்டுவான்கள் எவ்வாறு செயற்படும் என்பதை ஆராய்வதற்கு பயன்படும் ஒரு கருவி ஒன்றாகும். 

இரண்டாவதாக ஒரு பிளாஸ்டிக் போத்தலும், ஒரு கண்ணாடி போத்தலும் களிமண் அடைப்பானால் மூடப்பட்டு ஒரு கன சதுரத்தில் வைக்கப்படும். காற்று அழுத்தம் இல்லாத விண்வெளியில் இவை சிதைந்து விடுமா, சேதம் அடையுமா, அனுப்பியது போல் இருக்குமா என்பதைக் கண்டறிய உதவும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger