Home » » நிலவின் கதை கூறும் மண்ணியல் ஆய்வு

நிலவின் கதை கூறும் மண்ணியல் ஆய்வு

Written By Namnilam on Sunday, August 31, 2014 | 10:45 AM

மனிதனின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று மண், பாறைப் படிமங்கள், எரிமலைக் குழம்பு, ஆகியவற்றைக் கொண்டு கடந்த காலத்தின் வேர்களைக் கண்டறியும் 'மண்ணியல் ஆய்வு'! இவனது மண்ணியல் ஆய்வு பூமியோடு நின்று விடால், நிலவின் மண்ணெடுத்து ஆய்வு செய்து, நிலா எப்படி உருவானது என்பதை கண்டறியும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 

பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்து அதன் மீது மோதிவிடத் துடிக்கும் விண்கற்கள் ஒரு பக்கம் வானில் வலம் வந்து கொண்டிருக்க, சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'தியா' என்ற கிரகம் பூமி மீது மோதியதால் உருவானதே நிலவு என்றக் கோட்பாட்டை இந்த மண்ணியல் ஆய்வு உறுதி செய்கிறது. பெரு வெடிப்புக்குப் பிறகு பூமி உருவாகிவந்த நேரத்தில் அதன் மீது வேறொரு கிரகம் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான துணைக்கோள்தான் நிலவு என்ற இந்த அறிவியல் கோட்பாட்டை இதுவரை யாரும் நம்பத் தயாராக இல்லை. 

காரணம் இந்த அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவுக்குப் பயணம் செய்தபோது அங்கிருந்து பாறைகளில் இருந்து மாதிரி மண்துகள்களை எடுத்துவந்து பரிசோதனை செய்தனர். இந்த ஆய்வில் நிலவுப் பாறைகள் முழுவதும் பூமியிலிருந்து சென்றவைதான் என்றும் அதாவது பூமிப் பாறைகளில் காணப்படும் இரசாயன மூலக்கூறுகளும், தாது உப்புக்களும் அந்த பாறைகள் முழுமையிலும் பரவியிருந்ததை கண்டறிந்திருக்கிறார்கள். 

அதில் ஒன்று ஒட்சிசன் ஐசடோப். இதை கண்டறிந்ததும் மகிழ்ச்சிக் கூத்தாடிய விஞானிகள் மேலும் பல நுண்ணிய ஆய்வுகளை மேற்கொண்டனர். இம்முறை வேறொரு கண்டுபிடிப்பு ஆச்சரியமாக அமைந்தது. பூமிப் பாறைகளின் இரசாயன கூறுகளுக்கு தொடர்பற்ற வெளிக்கிரக சில கனிமத் தோற்றங்களும் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனியிலுள்ள கொயெடிங்கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருப்பதாகக் கூறுகின்றனர். 

பூமிப் பாறைகளுக்கும் நிலவுப் பாறைகளுக்கும் இடையில் சிறு வித்தியாசம் இருப்பதை தாங்கள் கண்டுபிடித்திருக்கின்றனர் என்றும் இரண்டு கிரகங்கள் மோதிக்கொண்ட கோட்பாட்டை ஆதரிப்பதாகவே இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளதென்றும் ஆய்வை வழிநடத்திய பேராசிரியர் டேனியல் ஹெர்வார்ட்ஸ் கூறினார். நிலவுப் பாறைகளில் காணப்படும் ஒட்சிசன் ஐசடோப்களுடைய கலவைகளுக்கிடையில் வித்தியாசங்களை அளந்து டாக்டர் ஹெர்வார்ட்ஸ் இந்த ஆய்வை செய்துள்ளார். 

பூமிப் பாறைகளில் ஒட்சிசன் ஐசடோப்களுடைய கலவை ஒரு விதமாகவும், நிலவுப் பாறைகளில் அது வேறு விதமாகவும் இருப்பதாகவும் முன்றாம் கட்ட மண்ணியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எல்லாம் சரி. பூமி மீது மோதிய அந்த கிரகத்துக்கு தியா என்ற பெயர் எப்படி வந்தது என்பதுதானே உங்கள் கேள்வி? இந்த மண்ணியல் ஆய்வுகள் மூல பூமி மீது மோதியதாகக் கருதப்படும் கிரகத்துக்கு கிரேக்க புராணத்திலிருந்து 'தியா' என்ற ஒரு பெயரைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள், ஆய்வை மேற்கொண்ட கொயெடிங்கென் பல்கலைக்கழக அறிவியல் ஆய்வாளர்கள்! ஆக உங்கள் பெண் குழந்தை பிறந்தா தியா என்று பெயர் வைக்காதீர்கள். அவள் மோதல் போக்கை கடைபிடிப்பவளாக வளரக்கூடும். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger