Written By Namnilam on Wednesday, September 24, 2014 | 9:28 PM

          தேன் பற்றிய சுவையான மருத்துவக்                                                  குறிப்புக்கள்




தேன் ஓர் இனிய உணவுப் பொருள் ஆகும்மருத்துவ குணமும் கொண்டது.

1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும்தேனும்வெந்நீரும் கலந்துஅருந்தினால் பருத்த உடல் மெலியும்ஊளைச் சதை குறையும்உடல் உறுதிஅடையும்.

2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்திகுமட்டல்ஜலதோஷம்தலை வலி குணமாகும்.

3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம்அடையும்.


4. தேனும், முட்டையும், பாலும் கலந்துசாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாஉபாதையிலிருந்து தப்பலாம்.

5. இருமல்சளித் தொல்லை நுரையீரல்தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக்கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்துசாப்பிட இருமல் மட்டுப்படும் சளித்தொல்லை குறையும்.

6. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சமஅளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டார் இருதய நோய்கள் தீரும்.

7. உடம்பில் இரத்தத் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும்பாலும்சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

8. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக் காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிடகீழ் வாதம்போகும்.

9. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால்வலி நீங்கும்.

10. தேனோடு பாலோஎலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த்தொந்தரவுகள் குறையும்கல்லீரல் வலுவடையும்.

11. அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுஸ் இஞ்சிச்சாறு கலந்து காலைநேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வரஇரத்த சுத்தியும்இரத்த விருத்தியும்ஏற்படும்நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

12. முருங்கைக்காய்ச் சாறுடன் சம அளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவைநீங்கும்.

13. தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்தேன் மூலம் எல்லாப்பிணிகளையும் நீக்க முடியும்அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனைநாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராதுஆனால்,தேன் சுத்தமான தேனாக இருக்க வேண்டும்.

14. நெல்லிக் காய்களைத் துண்டு துண்டாக்கி தேன்ஏலக்காய்ரோஜா இதழ்கள்சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும்பின்பு ஒரு ஸ்பூன்வீதம் காலையும்மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல்குணமாகிவிடும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர்தினமும் தேனை அருந்த வேண்டும்நாற்பது வயதைக் கடந்தவர்கள்கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger