Written By Namnilam on Monday, September 29, 2014 | 8:01 PM

காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம்?

காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடித்தால் தான் பலருக்கும் பொழுதே விடுகிறது.ஆனால் இது ஆரோக்கியமானது தானா? என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். நம் உடல் ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன
சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.
இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டும்.

                                                                  தண்ணீர்
ஒருநாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணிநேரத்துக்குள் குடிக்க வேண்டும்.வெந்நீரை விட குளிர்ந்த நீரை குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.வெறும் தண்ணீருக்கு பதிலாக வெந்தயத் தண்ணீர் கூட அருந்தலாம்.
வெந்தயத்தை முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது.
                                    ஆரோக்கியம் தரும் சாறுகள்
* அல்சர் நோயாளிகளுக்கு ஏற்ற பானம் அருகம்புல் சாறு தான், ஆனால் பக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி நம் உடலுக்கு உகந்தது அல்ல.
அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.
* வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும்.
கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும்.
* இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.
* தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.
இதில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்று நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.
          

                                                        இளநீர்    
 இயற்கை தந்த வரப்பிரசாதங்களில் ஒன்று இளநீர், உடலுக்கு நன்மை தந்தாலும் வெறும் வயிற்றில் குடிக்க கூடாது.
ஏனெனில் இதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், வயிற்றில் புண்கள் ஏற்படலாம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கூட அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
மேலும் வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம்.
        
                                                  நீராகாரம்
காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவதை இன்றளவும் கூட கிராமங்களில் பார்க்கலாம். இதன் மூலம் உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது.
                 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger