Home » , , , , , , » முன், பின் யோசிக்காது செய்திகளை வெளியிடவேண்டாம் – உதயன் பத்திரிகைக்கு போக்குவரத்து அமைச்சர் அறிவுரை!

முன், பின் யோசிக்காது செய்திகளை வெளியிடவேண்டாம் – உதயன் பத்திரிகைக்கு போக்குவரத்து அமைச்சர் அறிவுரை!

Written By Namnilam on Monday, February 24, 2014 | 3:41 PM

வடக்கு மாகாண சபை அமைச்சரவைக் கூட்டங்களில் எமது உறுப்பினர்களுக்கு அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மறைக்க வேண்டுமென்றோ அல்லது தெரியக் கூடாதென்றோ இதுவரையிலும் எந்த விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. எனவே முன் பின் யோசிக்காது செய்திகளை வெளியிடுவதனால் பொது மக்கள் குழப்பத்திற்குள் தள்ளப்படுகின்றார்கள். என்று வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். உதயன் பத்திரிகையில் வெளியாகிய செய்தி ஒன்று தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


deneeswaran


அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


உதயன் பத்திரிகையில் 23 – 02 – 2014 அன்று வெளிவந்துள்ள செய்தியில், வட மாகாண அமைச்சரவை முடிவுகளில் இரகசியம் என்ற தலைப்பின்கீழ் பிரசுரிக்கப்பட்டிருக்கும் செய்தியைக் கண்டு கவலையடைவதுடன், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவிக்கின்றார்.


வட மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் வெளிப்படையாகவும், பரஸ்பரமாகவும் இருக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே அமைச்சரவையினால் சபையின் அமர்வுக்கு முந்தைய தினம் எமது உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான கலந்துரையாடல்களில் சமூகமளிக்காது இவ்வாறான கருத்துக்களை பத்திரிகையில் வெளியிடுவது எதிர்காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.


மேலும் அவர் கூறுகையில், அமைச்சரவைக் கூட்டங்களில் எமது உறுப்பினர்களுக்கு அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மறைக்க வேண்டுமென்றோ அல்லது தெரியக்கூடாதென்றோ இதுவரையிலும் எந்த விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.


எனவே முன் பின் யோசிக்காது இவ்வாறான செய்திகளை வெளியிடுவதனால் பொது மக்கள் குழப்பத்திற்குள் தள்ளப்படுகின்றார்கள். இவ்வாறான தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காமல் இருப்பது அமைச்சரவைக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உறுப்பினர்களதும் தார்மீகக் கடமையாகும். மேலும் சபையின் அமர்வுக்கு முந்தைய தினம் கூட்டப்படுகின்ற கூட்டத்திற்கு எமது உறுப்பினர்கள் தவறாது சமூகமளித்தால், இவ்வாறான சந்தேகங்கள் அடியோடு நீங்கிவிடும் என்றும் தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger