Home » , , , , , , » முல்லைத்தீவு தேராவில் பகுதியில் உதவி வழங்கும் நிகழ்வு: புளொட் தலைவர் பங்கேற்பு (படங்கள்)

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் உதவி வழங்கும் நிகழ்வு: புளொட் தலைவர் பங்கேற்பு (படங்கள்)

Written By Namnilam on Monday, February 24, 2014 | 3:18 PM

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஜோசெப் விநாயகமூர்த்தி அவர்களின் இரண்டு பிள்ளைகளுக்கு புதிய சைக்கிள்கள் நேற்று 22.02.2014 வழங்கி வைக்கப்பட்டன. சுவிஸ் அகரம் பவுண்டேசன் நிறுவனம் (சுவிஸ் எல்லாளன் இறைச்சிக்கடை) இந்த உதவியினை வழங்கியுள்ளது.


5181 5183 5179


அத்துடன், முன்னாள் போராளியான ஜோசெப் விநாயகமூர்த்தி அவர்கள் தனது மோட்டார் சைக்கிளை திருத்துவதற்கு உதவி கேட்டதற்கிணங்க அதற்கான நிதியுதவியையும், சில பொருட்களையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது.


மேலும் முன்னாள் போராளியும், இசைக் கலைஞருமான மாற்றுத் திறனாளி நகுலேந்திரன் நிமால் அவர்கள், தனது இசைத்துறையினை மேம்படுத்துவதற்காக ஒரு தொகை நிதியுதவியையும் சுவிஸ் அகரம் பவுண்டேசன் நிறுவனத்தினர் (சுவிஸ் எல்லாளன் இறைச்சிக்கடை) வழங்கியுள்ளனர். இந்த உதவிகளுக்கான ஏற்பாட்டினை அதிரடி இணையத்தினர் மேற்கொண்டிருந்தனர்.


சுவிஸ் அகரம் பவுண்டேசன் நிறுவனத்தின் (சுவிஸ் எல்லாளன் இறைச்சிக்கடை) வேண்டுகோளுக்கிணங்க மேற்படி உதவியினை புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வழங்கி வைத்ததுடன், திருமதி மீனா சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு.கந்தையா சிவநேசன் (பவன்),


புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா கிளையையும், கோவில்குளம் இளைஞர் கழகத்தையும் சேர்ந்தவரான திரு எம்.கண்ணதாசன், மற்றும் கோயில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன், காண்டீபன், சதீஸ்,


சமூக சேவையாளரும், வவுனியா வரியிறுப்பாளர் சங்கத் தலைவருமான செல்வராஜா சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா வரியிறுப்பாளர் சங்க உறுப்பினரும், கவிஞருமான மாணிக்கம் ஜெகன், சமூக சேவையாளரும், அதிரடி இணைய இணைப்பாளருமான கேதீஸ் ஆகியோரும் மேற்படி நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இதேவேளை இந்த நிகழ்வின்போது புளொட் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கிராம மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger