Home » , , , , , , » தமிழ் மக்களை முகவரி அற்றவர்களாக மாற்றும் காலம் மிக விரைவில் ?- ச.சஜீவன்

தமிழ் மக்களை முகவரி அற்றவர்களாக மாற்றும் காலம் மிக விரைவில் ?- ச.சஜீவன்

Written By Namnilam on Friday, February 28, 2014 | 2:48 PM

அண்மைக்காலத்தில் தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெறுவதற்காக மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அதனை மறந்து இரணைமடு தண்ணீர் பிரச்சினைக்கு பெரிதுபடுத்தி தங்களுக்குள் மோதிக் கொள்கின்றார்கள்.


sajeevan


தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் பிறகு தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தொடர்பாக தங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தரக்கூடிய அரசியல் அமைப்பாக தமிழ் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிற காலத்தில், தங்களின் அரசியல் கதிரைகளை தக்க வைத்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை அமைச்சர்களும், உறுப்பினர்களும் முட்டிமோதி கொள்கின்றார்கள் இது மிகவும் கவலையான விடயமாகும்.


சமகாலத்தில் தமிழ் மக்களுடைய மிக முக்கிய பிரச்சினைகளான மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை, நில அபகரிப்புக்கள், தடுப்பு கைதிகளின் விடுதலை, யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை, அபிவிருத்தி போன்றவற்றை மறந்து தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், இரணைமடு நீர் பிரச்சினையை கையில் எடுத்து அதனை பூதாகரமாக்கி இலங்கை அரசாங்கத்தில் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றால் போல் செயற்பட்டு
கொண்டிருக்கிறார்கள.


தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள். இப் பிரச்சினையை இலங்கை அரசாங்கம் தீர்க்கபோவதில்லை. 13ம் சரத்தில் எந்த அதிகாரங்களும் தீர்வும் இல்லை என்று நிராகரிக்கப்பட்டதை 25 வருடங்களுக்கு பின் கையில் எடுத்து மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள்.


இந்தியாவின் சதித் திட்டத்தில் இணைந்த வடக்கு கிழக்கு பிரிக்கப்படும் போது, அதை இலங்கை அரசாங்கம் பிரித்து வடக்கு மகாண சபை, கிழக்கு மகாணசபை என இலங்கை அரசாங்கம் தேர்தலை நடத்திய போதும், இந்தியாவின் பொறுப்பற்ற சுயநல அரசியலால் நடவடிக்கையில் வடக்கான், கிழக்கான் என்ற பிரிவினை தோற்றம் பெற்றது.


இன்று வடக்கு மாகாண சபை ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலமும் புதிய, பிரிவினை சுயநல அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரணைமடு தண்ணீர் பிரச்சினையை தற்போது கையில் எடுத்துள்ள மகாணசபை, பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் யாழ்ப்பாணத்தான், வன்னியான் என்று மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இதன்மூலம் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயற்படுகிறார்கள்.


1940களில் சட்டசபை உறுப்பினராக இருந்த கௌரவ பாலசிங்கம் அவர்கள், யாழ். குடாநாட்டில் உள்ள உவர் நிலைகளை நன்னீர் நிலைகளாக மாற்றுவதற்கான செயல் திட்டத்தை முன்வைத்தார். ஆனால், இத் திட்டத்தை அன்றைய சுயநல தமிழ் அரசியல்வாதிகள் தடுத்தார்கள். அதேபோன்று இன்றும் இரணைமடு நீர்பிரச்சனையிலும் தொலைநோக்கு சிந்தனையற்ற, புத்தி சுயாதீனமற்ற அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் யாழ்ப்பாணத்தான், வன்னியான் என்ற பிரிவினை தோற்றுவிக்கிறார்கள்.


தமிழ் மக்களுடைய கருத்துக்களை கேட்காமல், இவர்களுடன் கலந்தாலேசிக்காமல் இந்தியாவினதும், தனிநபர்களின் ஆலோசனைகளை கேட்டு இன்று கூடி கதைப்பதன் நோக்கம் என்ன? 2009ம் ஆண்டு மே 18 க்கு பின் 05 வருடகங்களாக தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒன்று சேர்ந்து முடிவெடுக்க முடியாதவர்கள் இன்று கூடுகிறார்கள்.


முதலில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டால், இங்குள்ள இரணைமடு பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடியுமா?


தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினையில் இந்தியாவின் சொல்லுக்கு காவடி ஆடாமல், டெல்லியின் தீர்வை தமிழ் மக்களுக்கு திணிக்காமல், தமிழ் மக்கள் தம்மை தாமே ஆள்வதற்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும். இதனை தட்டிக்கழித்து, தங்களது சுயநல அரசியலை முன்னெடுப்பார்களேயானால், தமிழ் மக்கள் இவர்களை முகவரி அற்றவர்களாக மாற்றும் காலம் மிக விரைவில்.


ச.சஜீவன்
துணைத்தவிசாளர்,
வலி. வடக்கு பிரதேசசபை

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger