தேசிய நிழற்பட கண்காட்சி அலுவலகம் நடாத்தும் 16 ஆவது சர்வதேச புகைப்படக் கண்காட்சி இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் ஆரம்பமான இக்கண்காட்சியில் 27 நாடுகளைச் சேர்ந்த 108 பேரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் பிரதம விருந்தினராக வட மாகாண பேரவையின் தவிசாளர் சிவஞானம் கலந்து கொண்டதுடன் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாஇ வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் இத்தேசிய நிழற்பட படக்கலைஞர் சங்கத் தலைவர் சுனில் விக்ரமசிங்கஇசங்கத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரஞ்சித் அபயசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கண்காட்சியானது நாளை இடம்பெற உள்ளதுடன் பாடசாலை மாணவர்கள்இபுகைப்படப்பிடிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இன்றும் இநாளையும் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment