Home » , , , , , » மகசீன் சிறையில் உயிரிழந்த கோபிதாஸின் சடலம் சொந்த ஊரில் வைக்கப்பட்டுள்ளது

மகசீன் சிறையில் உயிரிழந்த கோபிதாஸின் சடலம் சொந்த ஊரில் வைக்கப்பட்டுள்ளது

Written By Namnilam on Thursday, February 27, 2014 | 2:48 PM

மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்த பிரித்தானிய குடியுரிமை பெற்ற தமிழ் அரசியல் கைதியான விசுவலிங்கம் கோபிதாஸ் (வயது 43) என்பவரின் சடலம் அவருடைய சொந்த ஊரான வடமராட்சி மந்திகையில் இறுதி அஞ்சலி நிகழ்விற்காக வைக்கப்பட்டுள்ளது.


பிரித்தானிய குடியுரிமை பெற்றிருந்த கோபிதாஸ் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலங்கை வந்திருந்த நிலையில், 2007ம் ஆண்டின் மார்ச் மாதம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதாகியிருந்தார்.


இவரது மரணத்தினையடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பிரிட்டனிலிருந்து இலங்கை வந்துள்ளனர். அவர்களால் சடலம் பொறுப்பேற்கப்பட்டு அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி நிகழ்விற்காக வைக்கப்பட்டுள்ளது. பெருமளவான மக்கள் திரண்டு வந்து அவருடைய பூதவுடலிற்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.


530353045305
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger