Home » » வவுனியாவில் கடும் மழை! 27 குடும்பங்கள் இடம்பெயர்வு

வவுனியாவில் கடும் மழை! 27 குடும்பங்கள் இடம்பெயர்வு

Written By Namnilam on Wednesday, April 30, 2014 | 1:38 PM


வவுனியா கன்னாட்டி பிரதேசத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் 27 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


நேற்று (29) மாலை பெய்த காற்றுடன் கூடிய மழையினால் இவர்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.கடும் காற்றுடன் மழை பெய்தமையினால் வீடுகளுக்குள் மழை நீர் வந்தமையினால் மக்கள் இடம்பெயர்ந்து பொது நோக்கு மண்டபமொன்றில் தங்கியுள்ளனர்.


அவ்விடத்தை உடனடி நலன்புரி நிலையமாக மாற்றி உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger