Home » » மட்டு. வாழைச்சேனையில் வெடிப்பொருள் மீட்பு

மட்டு. வாழைச்சேனையில் வெடிப்பொருள் மீட்பு

Written By Namnilam on Wednesday, April 30, 2014 | 12:23 PM

வாழைச்சேனை பிரதேசத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த வளவினுள் ஜொனி வகை வெடிப் பொருள் ஒன்றை இன்று புதன்கிழமை காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மர்மப் பொருள் ஒன்று தென்படுவதை தொடர்ந்து பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸார் குறித்து இடத்திற்கு வந்து அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


இதனை செயலிழக்கச் செய்வதற்காக குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினரின் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவித்தனர்.மேற்படி வளவினுள் கடந்த காலத்தில் பொலிஸாரின் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger