Home » » வவுனியா அதிசொகுசு ரயில் மீது மோதிய இன்னுமொரு ரயில், 75 பேர் படுகாயம்

வவுனியா அதிசொகுசு ரயில் மீது மோதிய இன்னுமொரு ரயில், 75 பேர் படுகாயம்

Written By Namnilam on Wednesday, April 30, 2014 | 2:09 PM


வவுனியாவில் இருந்து மாத்தறைக்கு பயணித்துக்கொண்டிருந்த ரெஜின ரயில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி ரயிலுடன் மோதியுள்ளது.


குருணாகல் பொத்துஹெர எனுமிடத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர்.சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


காயமடைந்தவர்கள் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அனர்த்தத்தினால் வடபகுதிக்கான ரயில் சேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger