உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது நாயகனாக நடிக்கிறார், தயாரிப்பாளராக இருக்கிறார். காமெடியாக நடிக்க ஒரு நாளைக்கு 15 இலட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும் காமெடி வாயிலாக மக்களுக்கு அட்வைசும் கொடுத்து வருகிறார்.
நாள் ஒன்றுக்கு 15 இலட்சம் வரை சம்பளம் வாங்கும் சந்தானம். தன் அலுலகத்தின் மின் இணைப்பை, வீட்டு இணைப்பு என்று பொய் சொல்லி ஏமாற்றி அனுபவித்து வந்துள்ளார். இதை கண்டுபிடித்த மின்சார வாரியம் அவருக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. சத்தமே இல்லாமல் அபராதத்தை கட்டிவிட்டு படத்தில் நடிக்க போய்விட்டார் சந்தானம்.
விருகம்பாக்கம் ஸ்டேட் பேங் காலணியில்தான் சந்தானத்தின் அலுவலகம் உள்ளது. பல வருடங்களாக அலுவலகம் செயல்பட்டு வந்தாலும் அதனை வீடு என்று கூறி சலுகை கட்டணத்தில் மின்சாரம் பெற்று வந்திருக்கிறார்கள். அதை மின்வாரியத்தின் பறக்கும் படை கண்டுபிடித்து அபராதம் விதித்திருக்கிறது. 60 ஆயிரம் ரூபாய் சந்தானத்திற்கு சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால் நாடறிந்த கலைஞன் நாட்டுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டாமா?- என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.
Post a Comment