பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள வாயை மூடி பேசவும் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நஸ்ரியா. நேரம் படத்தின் மூலமாக அறிமுகமான நஸ்ரியா கொஞ்ச நாட்களிலே முன்னனி நடிகை பட்டியலில் இடம் பிடிக்க, பின் நய்யாண்டி படத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் பல இயக்குனர்கள் நஸ்ரியாவை புக் செய்ய தயங்கினார்கள்.
அப்பிரச்சனை தீர்ந்த நிலையில் நஸ்ரியாவுக்கும் பஹத்திற்கும் நிச்சயம் நடைப்பெற்றிருந்தது.தற்போது கல்யாணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழக்கு போட இருக்கிறார் நஸ்ரியா. இந்நிலையில் வாயை மூடி பேசவும் திரைப்படம் குறித்து பேட்டி அளித்த துல்கர் சல்மான் தனக்கும் நஸ்ரியாவிற்கும் கேமிஸ்ட்ரி இப்படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளதாகவும், சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகியுள்ளதால் அவர்களுக்குள் இப்படத்தில் நல்ல ஜோடி பொருத்தம் அமைந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
Post a Comment