Home » » விஐபி ஆனார் விவேக்

விஐபி ஆனார் விவேக்

Written By Namnilam on Wednesday, April 30, 2014 | 3:47 PM

விவேக் தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகர். எங்கே போனார் விவேக்?? என்ன ஆனது அவருக்கு?? என்று அவரது ரசிகர்கள் நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் ”எலே டோன் டொரி பி ஹாப்பி” என்று அவரது ஸ்டைலிலையே வந்து விட்டார் விவேக்.


தமிழ் சினிமாவின் எல்லா முன்னணி நடிகர்களுடன் நடித்த விவேக் கொஞ்ச நாட்களாக “மரம் நடுதல்”போன்ற சமுகபணியில் ஈடுபட்டிருந்தார். மீண்டும் நடிப்பில் களமிறங்க, இவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகிறது.


“அஞ்சான்”, ”வை ராஜா வை”, பெயரிடப்படாத அஜித் படம் ஒன்று மேலும் “நான் தான் பாலா” படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ள நிலையில் இப்போது அவரின் வெற்றி கூட்டணியான தனுஷுடன் “வேலையில்லா பட்டதாரி”படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த வருடம் விவேக் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான் போல.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger