எட்டியாந்தோட்டையில் சட்டவிரோத துப்பாக்கி உற்பத்தி நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். இதன்போது துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், துப்பாக்கிகளின் பாகங்கள் உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர் இன்று ருவான்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment