Home » » உதயநிதி ஸ்டாலினுக்காக சந்தானம் திடீர் பிரச்சாரம்

உதயநிதி ஸ்டாலினுக்காக சந்தானம் திடீர் பிரச்சாரம்

Written By Namnilam on Sunday, April 20, 2014 | 8:03 AM

தி.மு.கழக தலைவர் கருணாநிதியின் பேரனும், பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்காக காமெடி நடிகர் சந்தானம் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.


இது தேர்தல் செய்தியாச்சேன்னு ரொம்ப யோசிக்காதீங்க பாஸ் சினிமா செய்திதான். இது கதிர்வேலன் காதல் படத்துக்கு பிறகு உதயநிதி நடிக்கும் படம் நண்பேண்டா. ஆர்.ஜெகதீஷ் இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயின். சந்தானம் காமெடியன்.


ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பாலசுப்பிரமணியம் கேமரா. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தேர்தல் காலம் என்பதால் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தேர்தல் எபெக்டோடு வெளியியிட்டிருக்கிறார் உதயநிதி. படத்தின் பின்னணியை பட யூனிட் வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது


உதயநிதி நயன்தாராவை துரத்தி துரத்தி காதலிப்பார். பல ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கும் நயன்தாரா, வெட்டி ஆபீசர் உதயநிதியை திரும்பிக்கூட பார்க்க மாட்டார். திடீர்னு மாஸ் அட்ராக்ஷன் வேணும்னா அரசியல்தான் ஒரே வழின்னு நண்பன் சந்தானம் அட்வைஸ் பண்ண உள்ளூர் அரசியலில் குதிக்கிறார் உதயநிதி.


லோக்கல் பிரச்னைகளுக்காக போராடி வெற்றி பெறும் உதயநிதி, இதே பாணியை காதலுக்கும் செய்தால் என்ன என்று யோசிக்கிறார். நயன்தாராவிடன் காதல் கோரிக்கை வைத்து உண்ணாவிரம், ஆர்ப்பாட்டம், மறியல்னு பல அகிம்சை போராட்டங்களை நடத்துகிறார். அதுதான் பர்ஸ்ட் லுக் போட்டோவின் பின்னணி என்கிறார்கள்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger