Home » » தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள இனவாத பௌத்த மயமாக்கல்

தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள இனவாத பௌத்த மயமாக்கல்

Written By Namnilam on Monday, April 21, 2014 | 8:51 AM

படிப்படியாக தமிழர் பிரதேசங்களை சிங்கள பௌத்த பேரினவாதம் பல முனைகளில் மிகவேகமாக கூறுபோட்டு விழுங்கிக் கொண்டிருக்கிறது. தமிழர்களுடைய விவசாய நிலங்கள், காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு ஆங்காங்கே சிங்கள குடியேற்றங்களும், பௌத்த விகாரைகளும், சிங்கள இனவாத இலட்சனைகளும், சிங்கள இராணுவ நினைவுச் சின்னங்களும் காளான்கள் போல் முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன.


மறுபுறத்தே கலாச்சார சீர்கேடுகள், குழு மோதல்கள், காட்டிக் கொடுப்புகள் என்று அரங்கேறிக் கொண்டிருக்க ..இவை எல்லாவற்றிற்கும் நடுவே தமிழர்களுடைய இருப்பை இல்லாது போகச் செய்யும் நிகழ்வு அங்கே மாயாஜால சுகபோகங்களுக்கு நடுவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.


தற்போது தமிழ் மக்களுடைய நிகழ்வுகள் அனைத்திலும் பாடசால விழாக்கள் தொடக்கம், பாலங்கள், கழிவறை கட்டடத் திறப்பு விழா வரைக்கும் சிங்கள அரச கைக்கூலிகளும், சிங்கள இராணுவத்தினரும் இல்லாமல் அங்கு எதுவும் நடப்பதில்லை.


இதில் என்ன கொடுமையெனில் தமிழர் தாயகப் பகுதிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனித்துவப் பெருமையுண்டு. தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்கள் எவ்வாறு சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது என்பதை நம்மால் காணக்கூடியதாகவே இருக்கிறது.


குறிப்பாகச் சொல்லப்போனால் சிங்களவரின் கண்டிய நடனம், சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கலை நிகழ்வுகள் அனைத்தையும் தமிழர்களுடைய அனைத்து நிகழ்வுகளிலும் வலுக்கட்டாயமாக புகுத்தப்பட்டு வருகின்றன.


இவற்றிற்கு சிங்கள கைக்கூலிகளும் துணைபோகின்றனர்.


எனவே தமிழர்கள், தமிழ் புத்திஜீவிகள், வடகிழக்கு தமிழ் மாணவர் சமூகம் மற்றும் தமிழ்ப் பெரியார்கள் அனைவரும் விழிப்பாக இருந்து சிங்கள அரசின் திட்டமிட்ட "தமிழ் பண்பாட்டு விழுமிய" அழிப்பிலிருந்து தற்காத்து கொள்வது எமது கடமையாகும்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger