உழைக்கும் மக்களை பாதாளத்திற்கு தள்ளும் சூழ்ச்சித் திட்டங்களை தோற்கடிப்போம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்றே இந்த சூழ்ச்சித் திட்டங்களை உழைக்கும் மக்கள் தோற்கடிப்பார்கள்.
உலக உழைக்கும் மக்களின் உன்னத நாளான இன்று இலங்கை உழைக்கும் மக்களை வாழ்த்துவது பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். சுதந்திரமானதும் ஜனநாயக ரீதியானதுமான மே தினக் கூட்டங்களை நடாத்த உழைக்கும் மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாடு சரியான அபிவிருத்திப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பண வீக்கம் தனி இலக்கமாக காணப்படுகின்றது. உழைக்கும் மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து தேசிய மற்றும் சர்வதேச சவால்களை வென்றெடுக்க செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment