இலங்கை ராணுவத்திற்கு வடக்கு மாகாணத்தின் இளைஞர் யுவதிகள் ஆயிரம் பேர் வரையில் சேர்ந்துக்கொள்ளப்படவுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற சமகால நிலவரங்கள் குறித்த ஊடக மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.இலங்கை ராணுவம் வட மாகாணத்தின் ஆயிரம் இளைஞர் யுவதிகளை ராணுவத்தில் சேர்ந்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
ராணுவத்தில் ஆயிரம் பேருக்கான வெற்றிடங்கள் உள்ள போதிலும், அதில் இணைவதற்கு அதனை விட ஐந்து மடங்கு எண்ணிக்கையானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்எனினும், துர் அதிர்ஷ்டவசமாக அவ்வளவு வெற்றிடங்கள் எங்களிடம் இல்லை. எதிர்காலத்தில் தேவை ஏற்படுமாயின் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
இவர்கள் பல்வேறு வேலைக்களுக்காகவும், இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், பயிற்சிகளை வழங்கி பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தவுள்ளோம்.
Post a Comment