தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வட அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பாரிய அளவு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிதி சேகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியுடப்பட்டுள்ள வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.எனினும் அவர்கள் சர்வதேச வலையமைப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன.
எனினும் 2013ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை அமெரிக்கா, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை இந்த வருடமும் நீடித்துள்ளது.
Post a Comment