Home » » தோனி அதிரடி, பெங்களூரை வென்றது சென்னை

தோனி அதிரடி, பெங்களூரை வென்றது சென்னை

Written By Namnilam on Sunday, May 25, 2014 | 11:58 AM

பெங்களூரு - சென்னை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை எடுத்தது. விராத் கோலி 73 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 25 ஓட்டங்களையும் எடுத்தனர்.


பதிலுக்கு களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடியது. ஸ்மித் 17 பந்துகளில் 34 ஓட்டங்களை எடுத்தார். டு பிளெஸிஸ் 54 ஓட்டங்களை எடுத்தார். எம்.எஸ்.தோனி இறுதியாக களமிறங்கி 28 பந்துகளில் 49 ஓட்டங்களை குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger