Home » » ராஜபக்சே விவகாரம், தமிழக கட்சிகள் மீது மோடி அதிருப்தி

ராஜபக்சே விவகாரம், தமிழக கட்சிகள் மீது மோடி அதிருப்தி

Written By Namnilam on Sunday, May 25, 2014 | 12:04 PM

பாராளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கிறது. வருகிற 26–ந் தேதி நரேந்திரமோடி, பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.


இதன்படி இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அவர் மோடி பிரதமராக பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ச.ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.


ராஜபக்சேவை அழைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து புதுடெல்லியில் நேற்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய வைகோ, ‘கொடுங்கோலன் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து மே 26ம் தேதி காலை 11 மணி அளவில் தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ம.தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஏந்தி அறப்போர் நடத்துவோம் என்று வைகோ இன்று அறிவித்துள்ளார்.


இந்நிலையில், ராஜபக்சேவின் இந்திய வருகை தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் மீது நரேந்திர மோடி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக, தனது ‘டுவிட்டரில்’ கருத்து வெளியிட்டுள்ள மோடி, ‘மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நிர்வகிப்பது, தாங்கள் அல்ல... மத்திய அரசுதான் என்பது தெரியாமல் இலங்கை அதிபருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டின் கட்சிகள், உள்ளன’ (Similarly all TN partz who r opposing srilankan president's invtation dnt knw, itz central govt which manages release of ur fishermen not u.) என்று தெரிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger