இயக்குனர், நடிகர் திரு ஜெய் ஆகாஷ் அவர்கள் அடுத்து ஒரு பிரம்மாண்டமாக யாழ்ப்பாணம் என்னும் திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தில் ஒளிப்பதிவாளரை தவிர மற்ற அனைத்து தொழில் நுட்பக்கலைஞர்களையும் இலங்கை தமிழர்களை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார் நடிகர் ஆகாஷ்.
இந்த முடிவு எதனால் என்று கேட்டதற்கு நானும் இலங்கை தமிழன் என்பதுதான். இலங்கை இளைஞர்களின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் பொருட்டு, அவர்களையும் திரை உலகில் ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.
ஏற்கெனவே துணை இயக்குனராக கவிமாறன், பாடல்கள் எழுத தீபன் செல்வன், லஷ்மணன் ஆகியோருக்கும் இப்படத்தில் வாய்ப்பளித்துள்ளேன்.
மேலும் கலை ஆர்வம் உள்ள இலங்கை தமிழ் இளைஞர்களை இத்திரைப்படத்தில் பங்குபெற வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Home »
திரைத் துளிகள்
» யாழ்ப்பாணம் திரைப்படம்
யாழ்ப்பாணம் திரைப்படம்
Written By Namnilam on Thursday, May 1, 2014 | 10:30 AM
Labels:
திரைத் துளிகள்
Post a Comment