மனைவியின் கரமொன்றை வெட்டி, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கணவர் ஒருவர் தொடர்பில் குருணாகல் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மனைவியின் கரத்தை வெட்டி அதனை பை ஒன்றில் இட்டு குருணாகல் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குருணாகல் பமுனுகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவரே இவ்வாறு மனைவியின் கரத்தை வெட்டி ஒப்படைத்துள்ளார். கள்ளத் தொடர்பு காரணமாக இ;வ்வாறு கரத்தை வெட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாக கணவருக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
கோபித்துக் கொண்டு விட்டை விட்டு சென்ற மனைவியை அன்பாக பேசி அழைத்து வந்து, காட்டுப் பகுதி ஒன்றில் வைத்து கரத்தை துண்டாக வெட்டி பை ஒன்றில் இட்டு பொலிஸாரிடம் கணவர் ஒப்படைத்துள்ளார்.
வெட்டப்பட்ட கரத்துடன், வெட்டுண்ட பெண்ணையும் பொலிஸார் உடனடியாக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Post a Comment