ஜெயதீபன் இயக்கத்தில் ஈழத்தில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் முழுநீள திரைப்படம் “செம்புலம்”. இப்படத்தை பற்றி இயக்குனர் ஜெயதீபன் கூறுகையில், ”முழுக்க முழுக்க கதையை, திரைக்கதையை நம்பி, 5D மார்க் கேமராவையும், ஒரு ஸ்டடிகேம்மையும் கையில் எடுத்துக்கொண்டு ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டோம்.யுத்தகாலத்திற்கு பின்னர் யாழில் தயாராகும் இரண்டாவது முழு நீள திரைப்படம் இதுவாக இருக்கும். இந்த படத்தில் வினோதன் இணை இயக்குனராகவும், எடிட்டராகவும் பணியாற்றுகிறார். இப்படத்தை ராஜ் மூவீஸ் சார்பாக தனுஷன் ராஜ் தயாரிக்கிறார். பாடல்களை உதயரூபன் எழுத, ஜேம்ஸ் ஸ்டூடியோ சுதர்சன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ‘கனவிலும் தேடுகிறேன்’ மேனன் மேற்கொள்கிறார். இதில் ராஜேஷ் நாயகனாகவும், பிரியதர்ஷினி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். தொடர்ந்து திவ்யாவுடன் நானும் நடித்திருக்கிறேன். இதுதவிர பல கலைஞர்களை தேடி கண்டு பிடித்து நடிக்க வைத்திருக்கிறோம்” என்றார்.விரைவில் இத்திரைப்படம் வெளிவரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Home »
திரைத் துளிகள்
» ஈழத்தில் தயாராகிவரும் “செம்புலம்” முழுநீள திரைப்படம்
ஈழத்தில் தயாராகிவரும் “செம்புலம்” முழுநீள திரைப்படம்
Written By Namnilam on Thursday, May 1, 2014 | 10:49 AM
Labels:
திரைத் துளிகள்
Post a Comment