வெயில் படத்தின் மூலமாக தனது இசை வாழ்க்கையை சினிமா துறையில் தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்.பின் கதாநாயகனாக பென்சில் திரைப்படத்தில் தனது ஹீரோ வாழ்க்கையையும் தொடங்கியுள்ளார்.
இசையையும் தனது ஹீரோ வாழ்க்கையும் ஒன்றாக தொடர நினைக்கும் ஜி.வி, தற்போது பென்சில் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்து நயன்தாரா இல்லேன்னா த்ரிஷா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பென்சில் திரைப்படத்தில் படிக்கிற பசங்களுக்கு மெசேஜ் சொல்லும் ஜி.வி, நயன்தாரா இல்லேன்னா த்ரிஷா என்ற திரைப்படத்தில் காதலுக்காக சுற்றிக்கொண்டிருக்கும் பசங்களுக்கு அட்வைஸ் செய்கிறாராம்.
இந்நிலையில் நடிகைகளின் பெயரை படத்தின் டைட்டீலாக பயன்படுத்திருப்பதால் அவர்கள் இருவரையும் சந்திக்க உள்ளாராம்.இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் இவர்களை சந்தித்து பரிசு கொடுக்க போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
Home »
திரைத் துளிகள்
» நயன்தாரா, த்ரிஷாவை சந்திக்க உள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்
நயன்தாரா, த்ரிஷாவை சந்திக்க உள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்
Written By Namnilam on Thursday, May 1, 2014 | 10:23 AM
Labels:
திரைத் துளிகள்
Post a Comment