வட மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. வெளிநாடுகளில் இயங்கி வரும் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்திருந்தது. இந்த தடை நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் வட மாகாணசபை தலையீடு செய்யக் கூடாது என அரசாங்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வட மாகாணத்தின் நகரங்களுக்கு பழைய பெயர்களை மீள இட வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தன.
Post a Comment