Home » » புனிதமான நகரில் பிரார்த்தனை செய்த போப்

புனிதமான நகரில் பிரார்த்தனை செய்த போப்

Written By Namnilam on Tuesday, May 27, 2014 | 12:43 PM

பாலஸ்தீனத்திலுள்ள மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கருதப்படும் நகரான பெத்லஹேமினை போப் ஃபிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்ததுடன் அங்கு பிரார்த்தைனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.


மேலும் போப் இஸ்ரேல் வழியாக் அல்லாமல் ஜோர்டானில் இருந்து நேரடியாக பாலஸ்தீனத்தை வந்தடைந்ததுடன் நிர்வாக அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதன் மூலமும் மறைமுகமாக பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளார் என அரசியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


புனித நகரங்களுக்கான தனது 3 நாள் சுற்றுப்பணத்தின் இரண்டாம் நாளான நேற்று பெத்லஹேமில் பிரார்த்தனை முடித்த பின் போப் உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார், 'இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையேயான திவிர மோதல்களுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டது. இவ்விரு நாடுகளும் சர்வதேசத்தின் அங்கீகாரத்தைப் பெறும் விதத்தில் இரு நாடுகளினதும் எல்லையை வரையறுக்க வேண்டும்! இரு நாடும் இந்த இலக்கை எட்ட விட்டுக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே இப்பகுதியில் அனைத்து மக்களும் தமது உரிமைகளை பாதுகாப்பையும் உறுதிப் படுத்த முடியும்!' என்றார்.


மேலும் போப் ஃபிரான்சிஸ் இஸ்ரேல் பாலஸ்தீன ஜனாதிபதிகள் இருவரையும் அடுத்த மாதத் தொடக்கத்தில் வத்திக்கானுக்கு பிரார்த்தனைக்கு வருமாறு அழைப்பும் விடுத்துள்ளனர். பெத்லஹேமில் போப் ஃபிரான்சிஸ் வெஸ்டர்ன் வால் மற்றும் டோம் ஆஃப் தி றொக் ஆகிய புனிததத் தலங்களில் பிரார்த்தனை செய்தார். இப்பகுதிகள் இரண்டுமே இஸ்லாமியர் மற்றும் ஜூடாயிசம் ஆகிய இரு மதத்தினருக்கும் சொந்தமான புனித இடங்கள் ஆகும்

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger