1971ம் ஆண்டு உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி ஆந்திரமாநிலம் செகந்தரபாத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் இன்று அனைவராலும் தல என்றழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்.
புராண கதைகளில் ஃப்னிக்ஸ் என்ற பறவையை நாம் கேள்விப்பட்டிருப்போம், எத்தனை முறை எரிந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வரும் அப்படி ஃபினிக்ஸ் பறவை தான் அஜித்.
எப்பின்புலமும் இல்லாமல் வாழ்க்கையில் பல தோல்விகளை கண்டு மீண்டும் மீண்டும் எழுந்து தோல்வியே உன்னை கண்டு பயந்து ஓடியது. ஒரு சாதாரண டூவீலர் மெக்கானிக்காக வாழ்க்கையை தொடங்கினாய். ஆனால் இன்று உன் போட்டோ இல்லாத டூ வீலரே இல்லை. உன் முதுகெலும்பில் வேணாலும் ஆயிரம் காயங்கள் இருக்கலாம், ஆனால் அந்த காயத்தின் மருந்தாக மட்டும் இல்லாமல் உன் முதுகெலும்பகவே இருப்பது உன் ரசிகர்கள் தான்.
கடலின் ஆழம் அளந்தது இல்லை என்பர் ஆனால் கடலின் ஆழம் கூட அளந்துவிடலாம், உன் ரசிகர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது தான் முடியாத ஒன்று.. அஜித் என்ற ஒரு சொல் இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரம் ,"தல" என்ற ஒரு சொல் இளைஞர்களின் மந்திர வாக்காக இருக்கும். இன்றைய இளைஞர் சமுதாயத்தின் நாடி, நரம்பு மட்டும் இன்றி அவர்களின் குருதியாக நீ ஓடிக்கொண்டு இருக்கிறாய்.
நீ ஒட்டும் பைக்கின் வேகத்தை விட, நீ ரசிகர்களிடம் காட்டும் அன்பின் வேகம் தான் அதிகம், தனது ரசிகர்கள் பலத்தை வைத்து அரசியல் செய்யும் பல நடிகர்கள் மத்தியில் மன்றமே வேண்டாம் என்று அவர்களின் நலனுக்காக நீ சிந்தித்தாய், நீ மன்றம் வேண்டாம் என்று கலைத்திருக்கலாம், ஆனால் உன் ரசிகர்களின் மனதில் இருந்து யாராலும் கலைக்க முடியாது.
நீ எந்த விழாவிற்கும் வருவது இல்லை ஆனால் உன் பேர் சொல்லாமல் எந்த விழாவும் நடப்பதில்லை, வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரிய கூடாது என்பர். ஆனால் நீ செய்யும் உதவி வலது கை மட்டும் இன்றி நீயே அதை மறந்து விடுவாய். “அமராவதி”யின் மனதில் “காதல் கோட்டை” கட்டி “ஆசை” நாயகனாக வலம் வந்த “காதல் மன்னன்” நீ.
யாருக்கும் அஞ்சாத குணம், வெளிப்படையான பேச்சு இது உனக்கு மட்டுமே உரித்தானது. எங்களுக்கு தீபாவளி, பொங்கல் என்று எந்த பண்டிகையும் இல்லை உன் படம் வெளி வரும் அந்நாளே எங்களுக்கு திருவிழா. ஒரு நடிகன் எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படி தான் வாழ வேண்டும் என்று அனைவருக்கும் முன் உதாரணமாய் இருந்தாய்.
"தல" நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும் "தலைப்புச்செய்தி" தான் இனி வருங்காலம் இது "தமிழ்நாடா"இல்லை "தல நாடா"என்று வியப்பார். இப்படி ஒரு நல்ல மனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதை கர்வமாக நினைக்கின்றோம்.
Home »
திரைத் துளிகள்
» பீனிக்ஸ் பறவை அஜித்
பீனிக்ஸ் பறவை அஜித்
Written By Namnilam on Thursday, May 1, 2014 | 10:08 AM
Labels:
திரைத் துளிகள்
Post a Comment