Home » » தாய்லாந்துக்கான இராணுவ உதவியை நிறுத்தியது அமெரிக்கா

தாய்லாந்துக்கான இராணுவ உதவியை நிறுத்தியது அமெரிக்கா

Written By Namnilam on Sunday, May 25, 2014 | 12:11 PM

தாய்லாந்தில் எதிரணி ஜனநாயகத்தை வலியுறுத்துவதனாலும் அங்கு இரத்தம் சிந்தா சதி அரங்கேறுவதாலும் அந்நாட்டுக்கான அனைத்து இராணுவ உதவியையும் நிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது குறித்து வெள்ளிக்கிழமை அமெரிக்க மாநில அரசின் பிரதிப் பேச்சாளர் மாரியே ஹார்ஃப் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்,


'நாம் ஏற்கனவே $3.5 மில்லியன் டாலர் பெறுமதியான FMF எனப்படும் வெளிநாட்டு இராணுவ நிதியுதவியினையும் IMET எனப்படும் சர்வதேச இராணுவக் கல்வி மற்றும் பயிற்சிக்கான நிதியையும் தாய்லாந்துக்கு வழங்குவதை நிறுத்தியுள்ளோம். மேலும் ஏனைய அனைத்து இராணுவ ரீதியான உதவிகளைத் தடை செய்வது குறித்தும் மீளாய்வு செய்து வருகின்றோம்!' என்றுள்ளார்.


இருந்த போதும் தாய்லாந்துக்கு அனைத்து விதமான இராணுவ உதவியும் உடனே நிறுத்தப் படுவதாக ஹார்ஃப் தெரிவிக்கவில்லை. 2013 ஆம் ஆண்டு அமெரிக்கா $10..5 மில்லியன் டாலர் பெறுமதியான இராணுவ உதவியை இருதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதார மற்றும் சர்வதேச பாதுகாப்பு வழிகாட்டல் ஆகிய வகைகளில் அளித்திருந்தது. இது தவிர ஆசியான் (ASEAN) மற்றும் அபெக் (APEC) ஆகிய பிராந்திய செயற்திட்டங்கள் மூலமும் தாய்லாந்து நிதியுதவி பெற்று வந்தது.


இந்நிலையில் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் கூறுகையில், தமது இராணுவத் தலைமை அதிகாரியான ஜெனரல் ராய்மொன்ட் டி ஒடியெர்னோ தனது நண்பரான தாய்லாந்து இராணுவத் தலைமை அதிகாரியான ஜெனரல் ப்ரயுத் சானோக்கா இனைத் தனது நாட்டுக்குத் திரும்பி அங்கு ஜனநாயக ஆட்சியை நிலைநாட்ட முயற்சிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாதாகத் தெரிவித்துள்ளது.


இதேவேளை அமெரிக்க மாநிலத் திணைக்களம் தனது மக்களை அரசியல் குழப்பம், இரவு நேர ஊரடங்குச் சட்டம் போன்ற காரணங்களால் தாய்லாந்துக்கான அதிலும் பாங்கொக்கிற்கான முக்கியத்துவமற்ற பயணங்களை மேலதிக அறிக்கை வெளியாகும் வரைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger