Home » , » படப்பிடிப்பில் அடாவடித்தனம் நடிகை அனன்யாவால் ரூ.50 லட்சம் நஷ்டம் வில்லன் நடிகர் புகார்

படப்பிடிப்பில் அடாவடித்தனம் நடிகை அனன்யாவால் ரூ.50 லட்சம் நஷ்டம் வில்லன் நடிகர் புகார்

Written By Namnilam on Friday, July 18, 2014 | 3:33 PM

அனன்யா நடித்த 'அதிதி' படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தை நிகேஷ்ராம் தயாரித்து இருந்தார். இவரே இதில் வில்லன் கேரக்டரிலும் நடித்தார். அனன்யாவின் அடாவடி மற்றும் ஊதாரிதனமான செலவுகளால் ரூ.50 லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிகேஷ்ராம் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இதகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:– ‘அதிதி’ படத்தில் நடிக்க அனன்யாவை அணுகியதும் ரூ.22 லட்சம் சம்பளம் கேட்டார். அதை கொடுத்தோம். படப்பிடிப்புக்கு கணவர் என சொல்லப்படும் ஆஞ்சயேலுவை அழைத்து வந்தார். இருவரும் வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்கினோம்.

பத்திரிகையாளர்களும், திரையுலகினரும் தங்களை பார்த்து விடுவர் எனச்சொல்லி அதில் தங்க மறுத்தார். அண்ணாசாலையில் உள்ள ஓட்டல் உணவுதான் பிடிக்கும். எனவே அங்கே ரூம் போடுங்கள் என்றார். அதையும் செய்தோம். சொந்த உபயோகத்துக்காக சொகுசு காரை எங்கள் செலவில் வாடகைக்கு எடுத்து ஊர் சுற்றினார்.

ஓட்டல் நிர்வாகத்தினரிடம் எங்களுக்கு தெரியாமல் ரொக்க பணத்தை வாங்கிக் கொண்டு அதையும் பில் கணக்கில் சேர்த்து விட்டார். அந்த தொகையை தர முடியாது என்றதும், படத்தில் நடிக்கமாட்டேன் என்றார். ஏற்கனவே அவரை வைத்து பாதி படம் எடுக்கப்பட்டு விட்டது. வேறு வழியின்றி பணத்தை கொடுத்தேன். படப்பிடிப்பில் அவர் சொல்லும் ஓட்டல்களில் போய் சாப்பாடு வாங்குவதற்கென்றே ஒரு வாடகை கார் சுற்றிக் கொண்டிருந்தது.

படப்பிடிப்புக்கு காலை 8 மணிக்கு தயாராக இருப்போம். ஆனால் ஓட்டலில் 10 மணிக்கு விழித்து 11 மணிக்குதான் படப்பிடிப்புக்கு வருவார். கென்யாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு அது ரத்தாகிவிட்டது. உடனே கென்யாவுக்கு ஏன் போகவில்லை என சண்டை போட்டு அதற்கான பயண செலவு தொகை ஒன்றரை லட்சத்தை எங்களிடம் வாங்கி விட்டனர்.

அனன்யாவும், ஆஞ்சநேயலுவும் எங்களுக்கு கொடுத்த தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல. அவரால் ரூ.50 லட்சம் வரை இழந்துவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகேஷ்ராம் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மலையாள படங்களிலும் நடிக்கிறார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger