Home » , » அந்தரத்தில் தொங்கும் அமலாபாலின் கணவர்

அந்தரத்தில் தொங்கும் அமலாபாலின் கணவர்

Written By Namnilam on Saturday, July 19, 2014 | 3:58 PM

அமலாபாலை திருமணம் முடித்து, ஹனிமூனையும் முடித்துவிட்ட இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு தற்போது படம் இயக்கும் வாய்ப்புகள் எதுவுமே இல்லை. அஜித், விஜய், விக்ரம் என்று மாஸ் மசாலா நடிகர்களை வைத்து வரிசையாகப் படங்களை இயக்கியவர். 

அடுத்து சூர்யாவிடம் ஒரு கதை சொன்னார். முதலில் கதை ஒகே என்று சொன்ன சூர்யா அதன்பிறகு விஜய்கு அல்வா கொடுத்துவிட்டு வெங்கட் பிரபுவுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். இதற்குக் காரணம் அவர் இயக்கிய எல்லாப் படங்களும் பேசப்பட்ட அளவுக்கு வியாபார ரீதியாக வெற்றி பெற்றதில்லை. இதனால் தொடர் வெற்றி கொடுத்துவரும் தனக்கு ஒரு தோல்விகூட அதலபாதளத்தில் தள்ளிவிடும் என்று முடிவு செய்தே அல்வா கொடுத்தாராம். சூர்யாவே புறக்கணித்த நிலையில் இவரை நம்பி முதலீடு செய்ய எந்தத் தயாரிப்பாளரும் முன்வரவில்லை. 

இதனால் தனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பிலேயே 'சைவம்' படத்தை இயக்கினார். அந்தப் படமும் ஓடவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தடுமாறிக்கொண்டிருக்கிறார். கடைசிவரை கைவிடமாட்டேன் என்று சொன்ன விக்ரம், இயக்குநர் விஜய் தனது பரம எதிரியான சூர்யாவிடம் சென்றதால் தற்போது விஜய் போன் செய்தால் கூட எட்ட முடியாத அளவுக்கு அவரை பிளாக் லிஸ்டில் வைத்துவிட்டார் எனத் தெரிகிறது. 

இயக்குநர் விஜயின் நிலையைக் கேள்விப்பட்ட நடிகை ராதிகா தனது ராடான் நிறுவனத்தின் சார்பில் அவரை வைத்து ஒரு படம் தயாரிக்கிறேன் என்று சொல்ல பெருமகிழ்ச்சியடைந்தாரம் விஜய். ராதிகா தன்னிடம் கதை கேட்கமாட்டார் என்று நினைத்த விஜய்க்கு அதிர்ச்சி. 'உங்களிடமிருக்கிற கதையை முதலில் சொல்லுங்கள் அது பிடித்திருந்தால் அதைப் படமாக்குவது குறித்து யோசிப்போம்" பிரபலமான இயக்குநருக்கு என்னடா இது சோதனை என்று புலம்பியபடி வேறுவழியின்றி கதை சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்டுவிட்டு உடனே பதில் சொல்லாமல் "நாங்கள் கலந்துபேசிவிட்டு உங்களிடம் சொல்கிறோம்” என்று சொல்லியனுப்பிவிட்டர்களாம். 

இதுவரை ராதிகாவிடமிருந்து பதில் இல்லாததால் அந்தரத்தில் தொங்கும் திரிசங்கு நிலையில் புதுமாப்பிள்ளை வாழ்க்கையையும் சரிவர அனுபவிக்க முடியாமல், படவாய்ப்பும் கேள்விக்குறி என்ற நிலை. அடுத்து அமலாபாலின் மாமியார் வாயைத் திறக்காமல் இருக்கவேண்டும். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger