Home » » வானில் பறக்கும் ஆய்வுக் கூடம்

வானில் பறக்கும் ஆய்வுக் கூடம்

Written By Namnilam on Wednesday, July 16, 2014 | 1:14 PM

விண்ணில் பறந்து கொண்டே விண்வெளியை ஆய்வு செய்யும் கூடம் ஒன்றை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா உருவாக்கியுள்ளது. ஒரு போயிங் ஜெட் விமானத்தில் 17தொன் எடையுள்ள தொலைநோக்கியை பொருத்தியுள்ளதுடன், அதை ஓர் ஆய்வுக்கூடமாக மாற்றி அமைத்துள்ளது. 

அந்த ஆய்வுமையத்துக்கு சோபியா ஆய்வுமையம் என்று பெயரிட்டுள்ளார்கள். போயிங் ஜெட் விமானம் இதற்கென்றே வெகுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 17 தொன் எடையும், எட்டு அடி நீளமும் உடைய தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு நகரும் கதவுக்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள 16x23 அடிகொண்ட மேடையின் மீது ஏற்றியுள்ளார்கள்.

 ஜன்னல் போன்ற தோற்றமுடைய பகுதி வழியாக இன்பிராரெட் கதிர்கள் மூலம் விண்வெளியை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்வார்கள். பூமியில் உள்ள விண்வெளி ஆய்வுமையங்களை விட விண்வெளி ஆய்வுமையத்தில் காட்சி நிலை தெளிவாக இருக்கும். இந்த விமானம் வான்வெளியின் விளிம்பின் அருகே பறக்கும் திறனுடையது என்பதால் இது சாத்தியமாகிறது. இந்த விமானம் சுமார் பன்னிரண்டு மணி நேரத்துக்கு விண்ணில் சஞ்சரிக்கக் கூடியது. மேலும் இது 6625 நோட்டிக்கல் மைல் பறக்கக்கூடியது. ட்ராபோஸ்பியர் என்று கூறப்படும் ஈரப்பதம் மிகுந்த பகுதியைத் தாண்டி பறக்கக்கூடியது என்பதால், பார்வை இன்னும் தெளிவாக இருக்கும். 

இந்த போயிங் 747 சிறப்பு செயல்பாடு விமானத்தை அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் 1970ஆம் ஆண்டுகளில் மற்ற 747 விமானங்களை விட வேகமாகவும், உயரமாகவும், மற்ற விமானங்களை விட கூடுதலான தூரத்துக்கும் பறக்கும் வகையில் உருவாக்கியது. இதை நாசா பறக்கும் விண்ணியல் ஆய்வுக்கூடத்துக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger