Home » » உங்கள் கணினி மெதுவாக இயங்கக் காரணம் என்ன

உங்கள் கணினி மெதுவாக இயங்கக் காரணம் என்ன

Written By Namnilam on Thursday, August 14, 2014 | 8:39 AM

புதிதாக வாங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை, கணினி மெதுவாக இயங்குகிறது என்று சிலர் புகார் கூறுவார்கள். வேறுசிலர் இதுவரை நன்றாகத்தான் இருந்தது. ஒரு வாரமாக Desktop தோன்றவே வெகுநேரம் ஆகிறது என்று குற்றம் சொல்வார்கள். 

இந்தப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் கணினியாகவும் இருக்கலாம் அல்லது அதனைப் பயன்படுத்தும் நாமாகவும் இருக்கலாம். எதுவாயினும் கணினியின் அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து பிரச்சினையை அணுகுவதே தீர்வைத் தரும். கணினி மெதுவாக இயங்குவதற்கு அடிப்படைக் காரணங்கள் சில: நினைவகப் பற்றாக்குறை கணினியின் மெமரி அளவு அதாவது புரோகிராம் ஃபைல்கள் பதியப்படும் டிரைவில் (பொதுவாக 'சி' டிரைவ்) காலி இடம் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கவேண்டும். 

சாதாரண பயன்பாட்டிற்கு வைத்திருப்பவர்களுக்கு குறைந்தது 2 ஜிபி அளவு காலியான நினைவகம் தேவைப்படும். கிராபிக் வேலைகள் அதாவது போட்டோ எடிட்டிங் மற்றும் வீடியோ எடிட்டிங் சார்ந்த பணிகளைச் செய்பவர்களுக்கு 10 ஜிபி அளவாவது தேவை. நினைவக அளவு குறையும்போது கணினியின் செயல்பாட்டு வேகமும் குறையும். அதேபோல தற்காலிக நினைவகத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் கணினி மெதுவாக இயங்கும். 

தேவையற்ற மென்பொருள்கள் கடையில் புதிதாக வரும் பொருட்களை வாங்க ஆசைப்படுவதுபோல இணையத்தில் கவர்ந்திழுக்கும் விளம்பரங்களைப் பார்த்து தேவையற்ற புரோகிராம்களை நிறுவுவதன் காரணமாகவும் கணினிகள் மெதுவாக இயங்கக்கூடும். எனவே, முதலில் அத்தகைய புரோகிராம்கள் ஏதேனும் சமீபத்தில் பதிந்தீர்களா என்பதைப் பார்த்து அதனை கணினியிலிருந்து நீக்கவும். 

மால்வேர் வைரஸ்கள் மேற்கண்ட வகை புரோகிராம்களுடனோ அல்லது வேறு பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகளுடனோ இணைந்து மால்வேர் வகை வைரஸ்கள் உங்கள் கணினியில் நுழைந்திருக்கலாம். எனவே, இவற்றை கண்டறிந்து நீக்க நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்வது அவசியமாகும். வாரம் ஒருமுறை முழுக் கணினியையும் ஸ்கேன் செய்து சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது நல்லது.

உங்கள் கணினியில் ஸ்பைவேர் இருக்கிறது, இத்தனை வைரஸ்கள் உங்கள் கணினியில் உள்ளது. நீக்க எங்கள் மென்பொருளைப் பயன்படுத்துங்கள் என்று பயமுறுத்தும் விளம்பரங்களைக் கிளிக் செய்து பதிவிறக்கி விடவேண்டாம். அவையே பல தொல்லைகளைத் தரக்கூடிய வைரஸ்களாக இருக்கலாம் எனவே கவனமாக இருக்கவும். கிராபிக் கார்ட் / வீடியோ கார்டில் குறைபாடு கணினியில் உள்ள கிராபிக் அல்லது வீடியோ கார்ட் திறன் மிக்கதாக உள்ளதா என்பதைப் பரிசோதிக்கவும். உங்கள் தேவைக்கேற்ற விதத்தில் அதன் செயல்பாடு இல்லையென்றால் உடனடியாக அதனை மேம்படுத்திட வேண்டும். 

வீடியோ கேம்கள் மற்றும் கிராபிக்ஸ் மென்பொருள்களைப் பயன்படுத்துவோருக்கே இந்தப் பிரச்சினை அதிகமாக ஏற்படும். குப்பைகளை நீக்கவும் புரோகிராம்களின் பயன்பாட்டினால் உருவாகும் தற்காலிக கோப்புகள் அதிகமான இடத்தைப் பிடித்திருந்தாலும், அழித்த கோப்புகள் ரீசைக்கிள்பின் போல்டரில் நிறைந்து வழிவதாலும் கணினி மெதுவாக இயங்கும். 

சரியான கிளீனர் புரோகிராமினைப் பயன்படுத்தி இவற்றை எளிதாக நீக்கலாம். ரெஜிட்ரி குறைபாடுகள் புதிய புரோகிராம் ஒன்றை பதிந்து அது சரிவர இயங்காமல் போயிருக்கலாம் அல்லது செயல்பாட்டிலிருந்த புரோகிராம் ஒன்றை ஏதேனும் காரணத்தால் நீங்கள் நீக்கியிருக்கலாம் எதுவாக இருந்தாலும் கணினியின் ரெஜிஸ்ட்ரி பகுதியில் பதியப்படும் விவரத்தில் பிழை ஏற்பட்டிருந்தால் கணினி மெதுவாக இயங்கும். இதனை சரி செய்ய ரெஜிட்ரியை நேரடியாக திறந்து நாமே சரி செய்யப் புகுவது சரியானதல்ல. 

ரெஜிஸ்ட்ரியை சரிசெய்யவும் சில புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி சரி செய்யுங்கள். குப்பைகளை அழிக்கவும், ரெஜிஸ்ட்ரியை சரி செய்யவும் சி கிளீனர் மென்பொருள் பயன்படுத்தலாம். ஹார்ட் டிரைவில் பிரச்சினை அடிக்கடி ஏற்படும் மின் தடங்கல் முறையான கணினி இயக்கம் இல்லாமை ஆகியவை ஹார்ட் டிஸ்க் இயக்கத்தை முடக்கிவிடும். ஹார்ட் டிஸ்க் வேகத்தில் ஏற்படும் தடை மொத்தக் கணினியின் இயக்கத்திற்கும் தடையாக அமையும். எனவே, ஹார்ட் டிஸ்க் வேகம் என்ன, நம் பயன்பாட்டிற்குரிய வேகம் உள்ளதா, ஏதேனும் கோளாறு உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். 

காற்றோட்டம் இல்லாமை கணினியை வெப்பமான பகுதியில் வைப்பதோ அல்லது காற்றோட்டமில்லாத இடத்தில் வைப்பதோ பிரச்சினையை ஏற்படுத்தும். சி.பி.யு. எனப்படும் கணினியின் ஒருங்கிணைந்த பகுதியில் அமைந்துள்ள பிரவுசர், மதர்போர்ட், ஆகியவற்றிற்கு காற்றோட்டம் சீராக செல்லவேண்டும். இதற்காகவே இரண்டு அல்லது மூன்று விசிறிகள் அதில் மாட்டப்பட்டிருக்கும். தூசிகளின் காரணமாகவோ புழுதின் காரணமாகவோ இந்த விசிறிகளின் இயக்கத்தில் குறைபாடுகள் ஏற்பட்டால் கணினி வெப்பம் அதிகரித்து இயக்கத்தில் தொய்வு ஏற்படும் அல்லது முற்றிலும் இயங்காமலும் போகலாம். 

அனைவரும் கணினிக்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்த முடியாவிட்டாலும் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் கணினியை வைத்து சரியாகப் பராமரித்துப் பயன்படுத்தினாலே வேகமான இயக்கத்தைப் பயன்படுத்தலாம். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger