Powered by Blogger.
Latest Post
Showing posts with label பிரதேச சபைக்குட்பட்ட. Show all posts
Showing posts with label பிரதேச சபைக்குட்பட்ட. Show all posts

மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட மூப்பன்குளம் புனரமைக்க ஏற்பாடு

Written By Namnilam on Thursday, February 27, 2014 | 5:28 PM

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட  சிராட்டிக்குளம் பிரதேசத்திலுள்ள மூப்பன்குளம் 25 மில்லியன் ரூபா செலவில் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஹாலிங்கம் தயாநந்தன்  தெரிவித்தார்.  mullaitivu

மிக நீண்டகாலமாக  புனரமைக்கப்படாமலுள்ளதால் இங்குள்ள விவசாயக் குடும்பங்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றன. இக்குள புனரமைப்பு தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்  ஹூனைஸ் பாருக் ஊடாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிசாட் பதியுதீனிடம் மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினர்.

இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின்  கவனத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  கொண்டுவந்த நிலையில்,  இக்குள புனரமைப்புக்கு  நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger