முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிராட்டிக்குளம் பிரதேசத்திலுள்ள மூப்பன்குளம் 25 மில்லியன் ரூபா செலவில் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஹாலிங்கம் தயாநந்தன் தெரிவித்தார்.
மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலுள்ளதால் இங்குள்ள விவசாயக் குடும்பங்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றன. இக்குள புனரமைப்பு தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஊடாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினர்.
இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கவனத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொண்டுவந்த நிலையில், இக்குள புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Powered by Blogger.
Latest Post
Showing posts with label மாந்தை கிழக்கு. Show all posts
Showing posts with label மாந்தை கிழக்கு. Show all posts
5:28 PM
மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட மூப்பன்குளம் புனரமைக்க ஏற்பாடு
Written By Namnilam on Thursday, February 27, 2014 | 5:28 PM
4:16 PM
மாந்தை கிழக்கு பொதுச்சந்தை வடமாகாண முதலமைச்சர் திறப்பு
Written By Namnilam on Wednesday, February 26, 2014 | 4:16 PM
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் நெல்சிப் திட்டத்தின் கீழ், 9.7 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தைக் கட்டிடத்தொகுதியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்துவைத்தார்.
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உபதலைவர் சி.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில், பெயர்ப்பலகையை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்; ஹுனைஸ் பாரூக் திரைநீக்கம் செய்தார்.
இதில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிவப்பிரகாசம் சிவமோகன், மேரி கமலா குணசீலன், வீரபாகு கனகசுந்தசுவாமி, அன்ரனி ஜெகநாதன், கேசவன் சயந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Labels:
தாயகம்,
பொதுச்சந்தை,
மாந்தை கிழக்கு,
முதலமைச்சர் திறப்பு,
வடமாகாண