Home » , , , » அகில இலங்கை சிவாலய தரிசன சைக்கிள் யாத்திரை (Photos)

அகில இலங்கை சிவாலய தரிசன சைக்கிள் யாத்திரை (Photos)

Written By Namnilam on Friday, February 28, 2014 | 3:20 PM

அகில இலங்கை சிவாலய தரிசன சைக்கிள் யாத்திரை சிவராத்திரி தினமான நேற்று (27.02.2014) சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் தேவஸ்தானத்திலிருந்து வாழ்நாள் சாதனை வீரர்களான சு.குணசேனரா, வை.கைலைநாதன் ஆகிய இருவரும் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தேவஸ்தான குரு சிவஸ்ரீ.சபா வாசுதேவ குருக்கள் அவர்களால் யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இவ் வைபவத்தில் வலி. மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த சைக்கிள் யாத்திரையானது, இலங்கை மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.


timthumb (1) timthumb

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger